Friday 23 September 2016

சிவன் அழிப்பவன் அல்ல Lord Shiva is the destroyer?

சிவன் பொய்களுக்குள் மெய்


சிவன் இந்த பெயரை சுற்றி கட்டமைக்கப்பட்ட கதைகளுக்குள்
உள்ள மெய் எது பொய் எது என அலசி
ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
நான் நாத்திகன் அல்ல சுத்த ஆத்திகன்.

சிவனை அனைவரும் அழிக்கும் கடவுள் என்பர்
எதை அழிப்பவன் என்று கேட்டால் , எல்லாரும் 
சொல்வாங்க கோபம் வந்தால் அதை அழிப்பான்,
இதை அழிப்பான் நெற்றிக்கண் திறந்தால்;
எதையும் அழிப்பான் என்பர்,
மன்மதனை , நக்கீரனை , பிரம்மனை
இன்னும் பெரிய லிஸ்ட் போடுவாங்க.

ஆனால், அதுவா உண்மை !
முட்டாள்கள்;
சிவன் தான் கருணைமிக்கவன், அன்பானவன்,
எவன் எதை கேட்டாளும் விருப்பு வெறுப்பு இன்றி 
உடனே கொடுப்பவன்.

பின்ன ஏன் அழிக்கும் கடவுள் என்று அழைக்கப்படுகிறான்?

தேவர்கள் உயிர்கள் அண்டசராசரங்கள் எல்லாம் 
அழியக்கூடியது
சிவன் மட்டும் பிறப்பும் இறப்பும் இல்லாதவன்.
அழிவது அனைத்தும் அவனில் தோன்றியது.
உலகுக்கும் உயிருக்கும் முக்தி அளித்து
அவனில் சேர்த்து பிறப்பில்லா வரம் தருபவன்

அழிந்தது என்றாலே அதன் பொருள் மீண்டும் 
படைக்கமுடியாது என்றுதானே பொருள்.

அப்ப சொர்க்கம், நரகம் என்றால் என்ன?
சொர்க்கம் செல்வதும், நரகம் செல்வதும் முடிவு அல்ல.
சொர்க்கம் என்றாலும் நரகம் என்றாலும் 
குறிப்பிட்ட காலம்தான் அங்கு இருக்க முடியும்.
அந்த நேரம் முடிந்தால் மறுபடி பிறந்துதான் ஆக வேண்டும்.

எனில், முக்தி என்றால் என்ன?

முக்தி எனில்,
அந்த முக்தி கிடைத்தால், மறுபடி ஒரு பொருளாகவோ
உயிராகவோ வாழ்க்கை கிடைக்காது.

இதையே நம் முன்னோர்,

"பிறவியில்லா பெருவாழ்வு" என்பர்.

நம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அழித்து,
முக்தியை தருபவன் சிவன்.
எனவே, அவனை அழிக்கும் கடவுள் என்பர் நம் முன்னோர்.
ஆனால், எங்கிருந்தோ வந்தவர்கள் 
அவனுடைய அம்சத்திற்க்கு ருத்திரன் என பெயர்சூட்டி,
அழிவின் கடவுளா அடையாளம் கொடுத்துவிட்டனர்
உண்மையில்  சிவனே பெருங்கடவுள் ( SUPREME GOD).
அழிவில்லாதவன், அன்பானவன்
அவனை போல அறிவில் சிறந்தவன்,
கொடையில் உயர்ந்தவன் எவனுமில்லை.

என்னுடைய அடுத்த பதிவில் சமஸ்கிருத வேதம் உண்மையா பொய்யா என பார்க்கலாம்.
[[நான்கு வேதமும் உபநிடதமும் ஏமாற்றா]]

இது, என்னுடைய முதல் பதிவு,
அழிவில்லா என் சிவனை முதலில் பதிவு செய்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
சிவசிவ...